என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் படுகொலை"
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரை சேர்ந்தவர் சிவகாமி (வயது 35). கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு மீஞ்சூரை அடுத்த வாயலூரில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார்.
கடந்த 3 நாட்களாக அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்த நிலையில் சிவகாமி தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் சிவகாமி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
சிவகாமியின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டு அவரது கழுத்து பாதி அளவு அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் கை, உடலிலும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.
அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. வீட்டின் கதவு திறந்து கிடந்ததால் சிவகாமியின் உடலை நாய்கள் கடித்து குதறி இருந்தன.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. சிவகாமி அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை.
எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையுண்ட சிவகாமி காட்டூர் காலனியில் உள்ள சத்துணவு கூடத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு 12 வயதில் மகன் உள்ளான். அவன் வாயலூர் கொக்கு மேடு பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி உள்ளான்.
வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த முசரவாக்கம் கிராமம், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். விவசாயி. இவரது மனைவி பார்வதியம்மாள் (60). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினமும் காலையில் வீட்டு வேலைகளை செய்து விட்டு 11 மணியளவில் தன்னுடைய 2 கறவை எருமை மாடுகளை திருப்புட்குழி ஏரிக்கரை பகுதிக்கு மேய்ச்சலுக்கு கூட்டி செல்வார்.
நேற்றும் இவர் மாடுகளை ஓட்டிச் சென்றார். மாலை வெகு நேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை. எனவே மகள் ரேணுகா மற்றும் அக்கம் பக்கத்தினர் சென்று ஏரிக்கரை பகுதியில் தேடினார்கள். மாடுகள் மட்டும் கட்டப்பட்டிருந்தது. இவரை காணவில்லை.
அக்கம் பக்கம் தேடிய நிலையில், அருகில் உள்ள முட்புதரில் காதில் ரத்தம் சொட்டிய நிலையில் மர்ம மான முறையில் பார்வதியம்மாள் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயின் மற்றும் காதில் அணிந்திருந்த தங்கதோடு ஆகியவைகளை கொள்ளையடிப்பதற்காக அவரை கொலை செய்துள்ளனர்.
இது குறித்து மகள் ரேணுகா பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி சம்பவ இடம் சென்று பார்வையிட்டார். தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்க டிஸ்பி பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மோப்ப நாய் அஜய் சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
மதுஅருந்திவிட்டு வாலிபர்கள் யாராவது இதைச் செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இக்கொலை நடந்துள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சிராயப்பாளையம்:
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள பன்னிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பித்தன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமாயி (வயது 63).
நேற்று ராமாயி தனது மகன் சீனிவாசனிடம் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் கவலை அடைந்த சீனிவாசன் உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு அவரது தாய் இல்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரும், உறவினர்களும் ராமாயியை அக்கம் பக்கத்தில் தேடினர்.
இந்த நிலையில் பன்னிப்பாடி-முண்டியூர் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் ராமாயி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கரியாலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமாயியின் உடலை பார்வையிட்டனர். அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. மேலும் அவரது உடல் அருகே ரத்தம் படிந்த நிலையில் கல் ஒன்றும் கிடந்தது.
எனவே மர்ம மனிதர்கள் ராமாயியை தாக்கி அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமா? என்பது உள்பட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலையில் கல்லை போட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
தஞ்சை கீழவாசல் வீதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 45). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளைச்சாமி இறந்து விட்டார். இதையடுத்து தனலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அதே பகுதியில் வேலைப்பார்த்து வந்த கடலூர் வாலிபர் ஒருவருடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதையடுத்து அந்த வாலிபர் தனலட்சுமியை தஞ்சாவூரில் இருந்து கடலூருக்கு அழைத்து வர முடிவு செய்தார். அதன்படி தனலட்சுமியின் குழந்தைகளை தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு தனலட்சுமியை மட்டும் கடலூர் கூத்தப்பாக்கத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் அங்குள்ள பாரதியார் நகரில் அந்த வாலிபரும், தனலட்சுமியும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று இரவு அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபர் ஆத்திரம் அடைந்து தனலட்சுமியின் தலையில் அம்மி கல்லை தூக்கி போட்டார். இதில் தனலட்சுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் தனலட்சுமி பிணமாக கிடப்பை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கொலை செய்யப்பட்டு கிடந்த தனலட்சுமியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதல் பிரச்சினையில் தனலட்சுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக கடலூர் முதுநகரை சேர்ந்த வாலிபர் சரவணனை (வயது 39) போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகள் ரம்யா (வயது 23). இவருக்கும் நல்லூர் பாளையம் பகுதியை சேர்ந்த விஜயக்குமார் (வயது 25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் வைத்து நடைபெற இருந்தது. இதற்காக 2 குடும்பத்தினரும் பத்திரிகை கொடுப்பது உள்ளிட்ட திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தனர்.
நேற்று முன்தினம் விஜயகுமார் , ரம்யாவை வெளியே அழைத்து சென்றார். அதன்பின் 2 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர் பல இடங்களில் விஜயகுமாரையும், ரம்யாவையும் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து ரம்யாவின் தந்தை கோதண்டபாணி புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான விஜயகுமார் மற்றும் ரம்யாவை தேடிவந்தனர்.
இந்த நிலையில் திருநாவலூர் அருகே உள்ள இருந்தை கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் ஒரு இளம்பெண் பிணமாக மிதந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் திருநாவலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றுக்குள் பிணமாக மிதந்தவர் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மாயமான பண்ருட்டி ரம்யா என்பது தெரியவந்தது.
இதுபற்றி ரம்யாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ரம்யா உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவை வெளியே அழைத்து சென்ற விஜயகுமாரை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த விஜயகுமாரை பிடித்தனர். அவருடன் அவரது நண்பர் நல்லூர் பாளையத்தை சேர்ந்த பாண்டியனும் சிக்கினார். அவர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
எனக்கும் ரம்யாவுக்கும் இன்னும் 4 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. எனக்கு ரம்யாவை பிடிக்கவில்லை. எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முடிவு செய்தேன். ஆனால் முடியவில்லை. இதையடுத்து நாம் வெளியே செல்லலாம் என்று கூறி ஏமாற்றி ரம்யாவை ஒரு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றேன். என்னுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் எனது நண்பர் பாண்டியனையும் உடன் அழைத்து சென்றேன்.
நாங்கள் 3 பேரும் திருநாவலூர் அருகே இருந்தையில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றோம். அங்கு நாங்கள் பேசி கொண்டிருந்தோம். எனக்கு உன்னை பிடிக்கவில்லை. இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்து என்று ரம்யாவிடம் கூறினேன். அதற்கு அவர் மறுத்தார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்தேன். பாண்டியனுடன் சேர்ந்து ஒரு துணியால் ரம்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் ரம்யாவின் பிணத்தை அங்குள்ள கிணற்றில் வீசி விட்டு தலைமறைவானோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து விஜயகுமார் மற்றும் பாண்டியன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்